புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : சனி, 15 டிசம்பர் 2018 (12:41 IST)

மகரம் - மார்கழி மாத பலன்கள்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - கிரகநிலை: ராசியில் கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாபஸ்தானத்தில் குரு,  புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன், சனி ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
 
மன உறுதியும், எதையும் கண்டு அஞ்சாமல் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க பாடுபடும் மகர ராசியினரே இந்த மாதம் வாக்கு  வன்மையால்  காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம்  இருந்து கொண்டே இருக்கும்.  திடீர் பணதேவை  ஏற்படலாம்.  தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும்.
 
உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். சக ஊழியர்களும் உங்கள்  பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபணமாகி வேலையில்  சேர்ந்துவிடுவார்கள். 
 
வியாபாரிகளுக்கு வருமானம் நன்றாக இருந்தாலும் போட்டிகளை சந்திக்க நேரிடும். அதனால் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும்.  கோபப்படும் தருணங்களைத் தவிர்க்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். 
 
அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேலிடம் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து முக்கியப் பணிகளைக்  கொடுக்கும். தொண்டர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்களின் திட்டங்களை சிரமமின்றி முடிப்பீர்கள். கட்சிப் பணிகளுக்காக சில புதிய  பயணங்களை மேற்கொள்வீர்கள். 
 
கலைத்துறையினர் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். புதிய பாணியில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். சக கலைஞர்களின் ஆதரவைப்  பெற்று மகிழ்வீர்கள். சந்தர்ப்பங்களைத் தவற விடாமல் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு துறையில் வளர்ச்சி அடைவீர்கள். 
 
பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். உற்றார், உறவினர்களிடமிருந்து  நல்ல செய்தி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். தெய்வ பலம் அதிகரிக்கும். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். பண வரவு   சீராகவே இருக்கும். 
 
மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். பாடங்களை மனப்பாடம் செய்து படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற  முயற்சிக்கவும். மற்றபடி பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.
 
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
 
இந்த மாதம் குடும்பத்தில் அக்கறை காட்டுவீர்கள். நீங்கள் கவலை, பயம் இல்லாமல் செயல்படக்கூடியவர். எல்லா விஷயத்திற்கும்  மனசாட்சியை நம்புபவர். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். இதுவரை இருந்து வந்த மனகவலை நீங்கும். வாகனத்தில்  செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல்  தடங்கல்கள் ஏற்படலாம். 
 
திருவோணம்:
 
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும்.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள்  கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.  குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும்.
 
அவிட்டம் 1,2 பாதம்:
 
இந்த மாதம் திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. எந்த ஒரு காரியமும்  வெற்றியடைவதுடன் லாப கரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல் திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில  விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். 
 
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். நீராஞ்சன தேங்காய் தீபம் ஏற்றவும்.  மரிக்கொழுந்து அல்லது துளசியை பெருமாளுக்குப் படையுங்கள்.
 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
சந்திராஷ்டம தினம்: டிசம்பர் 27, 28
அதிர்ஷ்ட தினம்: டிசம்பர் 18, 19.