விருச்சிகம் - மார்கழி மாத பலன்கள்

Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (12:23 IST)

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) - கிரகநிலை: ராசியில் குரு, புதன்  -  தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், சனி   - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் கேது - சுகஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில்  ராகு - அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
 
வாழ்க்கையில் முன்னேற்றமடையை திட்டமிட்டு செயல்படும் விருச்சிக ராசியினரே இந்த மாதம் எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம்  ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம்  உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும்.
 
உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைப் பளு குறையும். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும்  ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கும். மற்றபடி தயக்கமின்றி உங்கள் எண்ணங்களை மேலதிகாரிகளிடம் எடுத்துக் கூறுவீர்கள். அலுவலகத்தில்  சகஜமான நிலை இருக்கும்.
 
வியாபாரிகளுக்கு வியாபாரம் சீராகவே நடக்கும். ஆனாலும் ஓய்வில்லாமல் உழைக்க நேரிடும். கொடுக்கல், வாங்கல் ஓரளவு நன்றாகவே  தொடரும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வியாபார வட்டாரத்தில் உங்கள் கௌரவமும், அந்தஸ்தும் உயரும். அதேநேரம் கூட்டாளிகளை  நம்பி எதையும் செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்கள் திருப்தியடைவார்கள்.
 
அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி முடியும். ஆனாலும் தொண்டர்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடும்.  எனவே பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்துகொள்ளவும். மற்றபடி சமுதாயத்தில் பொறுப்புமிக்க பதவிகள் உங்களைத் தேடி வரும்.  உங்கள் பெயரும் புகழும் வளரும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள்.
 
கலைத்துறையினரின் விடாமுயற்சிகள் பெரும் வெற்றிகளைப் பெறும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். ஆனாலும் அதிக  முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மற்றபடி உங்களைக் குறைசொல்லும் சக கலைஞர்கள் பற்றி அதிகம் கவலைப்பட  வேண்டாம்.
 
பெண்மணிகள் கணவருடனான ஒற்றுமையில் பங்கம் ஏற்படாத வண்ணம் கவனமாக நடந்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களால் சிறு  பிரச்சனைகள் ஏற்படலாம். பேசும்போது அவசரப்படாமல் நிதானமாகப் பேசவும். உற்றார், உறவினர்களை கௌரவமாக நடத்தவும். மற்றபடி பண  வரவுக்கு எந்தப் பிரச்னையும் வராது.
 
மாணவமணிகள் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகம் பாடுபட்டு படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். எனினும்  பெற்றோர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உற்சாகத்துடன் விளையாட்டில் ஈடுபடுவீர்கள்.
 
விசாகம் 4ம் பாதம்:
 
இந்த மாதம் எத்தனை தடைவந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்க மாட்டீர்கள். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும்.  பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.  நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன்  கிடைக்க பெறுவீர்கள். 
 
அனுஷம்:
 
இந்த மாதம் தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு  கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன்,  மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். 
 
கேட்டை:
 
இந்த மாதம் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவீர்கள். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வரட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை  கரைத்துக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப்  பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். 
 
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும். பிச்சிப்பூ வாங்கி அருகிலிருக்கும் முருகனுக்கு மாலையாக சாத்தி வழிபடவும். மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.
 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
சந்திராஷ்டம தினம்: டிசம்பர் 23, 24 
அதிர்ஷ்ட தினம்: ஜனவரி 12, 13, 14.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
இதில் மேலும் படிக்கவும் :