1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
  4. August month astrology prediction

ஆகஸ்ட் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்

ஆகஸ்ட் 2021
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

 
கிரகநிலை:
ராசியில் செவ்வாய், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
கிரகமாற்றங்கள்:
05-08-2021 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் ராசியிலிருந்து   தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் ராசியிலிருந்து   தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
நட்புக்கு முதலிடம் கொடுத்து காரியங்களை செய்யக் கூடிய திறமை உடைய சிம்ம ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களிடம் உள்ள திறமை அதிகரிக்கும். தனஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரன் இருப்பு  பணவரத்தை அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
 
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது  வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை  செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.
 
கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன்  பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். 
 
பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது. 
 
கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். 
 
அரசியலில் உள்ளவர்களுக்கு நலல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும்.  
 
மாணவர்களுக்கு கவனமாக பாடங்களை படிப்பது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை.
 
மகம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். ஆர்டர்பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள்.  மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
 
பூரம்:
இந்த மாதம் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள்.
 
உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில்  பங்கேற்கும் போது கவனம் தேவை.
 
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஆகஸ்ட் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: கன்னி