புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : சனி, 15 டிசம்பர் 2018 (12:47 IST)

கும்பம் - மார்கழி மாத பலன்கள்

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்) - கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண,ரோக சத்ரு ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் குரு, புதன்  -  லாபஸ்தானத்தில் சூர்யன், சனி - விரய ஸ்தானத்தில் கேது ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
 
அனுபவ அறிவும், செயல்திறனையும் பெற்ற  கும்பராசியினரே உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். இந்த மாதம்  செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.  சிலருக்கு இடமாற்றம்  உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும்.
 
உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். இதனால் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்பார்த்த  பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். சக ஊழியர்களும்  உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அதேநேரம் அலுவலக ரீதியான பயணங்களைத் தவிர்க்க முடியாது. வியாபாரிகளுக்கு நல்லவர்கள்  கூட்டாளிகளாக அமைவார்கள். 
 
வியாபாரத்தில் நஷ்டங்கள் வராது. வாராக் கடன் என்று நினைத்திருந்தவை திரும்பி வந்து உங்களை ஆச்சரியப்படுத்தும். அதேநேரம் கணக்கு  வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். உங்களின் தனித் தன்மை வெளிப்படும். வியாபாரத்தை பெருக்க புதிய உபகரணங்களை  வாங்குவீர்கள். 
 
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு நன்றாக இருந்தாலும் புதிய பொறுப்புகளைப் பெற முடியாது. அதேசமயம் உங்கள் மீது  தொடுக்கப்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாகவே முடிவடையும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன்  இருக்கவும். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை திட்டமிட்டு செய்து வெற்றி பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு நன்றாகவே  இருக்கும். 
 
கலைத்துறையினருக்கு புகழோடு பண வரவும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெற நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பலனளிக்கும்.  ரசிகர்களின் ஆதரவுடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களின் பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். 
 
பெண்மணிகள் தங்களின் எண்ணங்களை சிறப்புடன் செயல்படுத்துவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளை  ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். 
 
மாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்தினால்தான் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். மற்றபடி பெற்றோர் மற்றும்  ஆசிரியர்களின் ஆதரவு தொடர்ந்து நன்றாகவே இருக்கும். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.
 
அவிட்டம் 3, 4 பாதம்:
 
இந்த மாதம் பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு  தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட  நாட்களாக வாங்க  நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள்.  வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
 
சதயம்:
 
இந்த மாதம் எதையும் திட்டவட்டமாக பேசி காரியங்களில் குழப்பம் இல்லாமல் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் ஆராய்ந்து  பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரத்து கூடும்.  புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
 
பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
 
இந்த மாதம் உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும்.  குடும்பத்தில் வாக்கு வாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கை துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக  கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். 
 
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் சனிஹோரையில் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள். அரளி மலரை அம்மன்  கோவிலுக்குப் படைக்கவும். அவளின் கிருபையால் உங்கள் தைரியம் அதிகரிக்கும். 
 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 1, 2
சந்திராஷ்டம தினம்: டிசம்பர் 29, 30 
அதிர்ஷ்ட தினம்:  டிசம்பர் 20, 21, 22.