செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2023 (08:38 IST)

ஏப்ரல் 2023 மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்

Monthly Astro Image
ஏப்ரல் 2023 மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்

கிரகநிலை:


தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் குரு, சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றங்கள்:

07-04-2023 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

14-04-2023 அன்று சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

22-04-2023 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

பலன்:

ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்களை பெற்ற ரிஷபராசியினரே நீங்கள் கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். இந்த மாதம் உங்களுக்கு பூமி மூலமும், வீடு வாகனங்கள் மூலமும் லாபங்கள் இருக்கும். தடைபட்ட பணம் கைக்கு கிடைக்க  வகை செய்யும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு  வெற்றி காண்பீர்கள்.  இருப்பினும் குரு அஷ்டமாதிபதியாகவும் இருப்பதால் அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது.  விரும்பதகாத ஆசைகள் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.  எல்லா நற்பலன்களும் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதப்படலாம்.

குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும்.  பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.  அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது.

அன்னிய மனிதர்கள் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியத்தை சாதிக்க எடுக்கும் முயற்சிகளில் தடை உண்டாகலாம். வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்கிடையே  அடிக்கடி  வாக்குவாதங்கள் உண்டாகலாம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

பெண்கள் இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது  நல்லது.

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். விளையாட்டுகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

ரோகிணி:

இந்த மாதம் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

மிருகசிரீஷம் 1, 2, பாதம்:

இந்த மாதம் செல்வ சேர்க்கை உண்டாகும். எந்த ஒரு  வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் பண வரவு அதிகரிக்கும்.

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில்  சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 12, 13
அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6