ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2023 (06:01 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (01-04-2023)!

daily astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
 

மேஷம்:
இன்று குடும்பத்தில் ஒற்றுமை, சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, பொருளாதார உயர்வு, கடன்கள் குறைய கூடிய அமைப்பு உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

ரிஷபம்:
இன்று பொருளாதார நிலை மிக சிறப்பாக அமையும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபமும் அபிவிருத்தியும் பெருகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

மிதுனம்:
இன்று பிரிந்து சென்ற உறவினர்களும் தேடிவந்து நட்பு கரம் நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

கடகம்:
இன்று கை, கால் மூட்டுகளில் வலி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தம்பதிகளிடையே உண்டாகக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தின் ஒற்றுமை குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

சிம்மம்:
இன்று தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.  நண்பர்கள் உறவினர்களிடையேயும் பகைமை உண்டாகும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் தவிர்த்து விடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கன்னி:
இன்று பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். ஆடம்பர செலவுகள் கூடவே கூடாது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

துலாம்:
இன்று புதிய வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருப்தியான மண வாழ்க்கையும் அமையும். சந்தாண பக்கியமும் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

விருச்சிகம்:
இன்று என்ன தான் பாடுபட்டாலும் திறமைகளை வெளிபடுத்த முடியாதபடி தடைகள் ஏற்படும். உங்களின் உழைப்பிற்கான பாராட்டுதல்களை பிறர் தட்டிச் செல்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

தனுசு:
இன்று எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். தேவையற்ற இட மாற்றங்களால் அலைச்சல்களும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

மகரம்:
இன்று மேலதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அடிக்கடி உடலில் பாதிப்புகள் உண்டாவதால் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

கும்பம்:
இன்று வரவேண்டிய நிலுவைத் தொகைகளும் இழுபறியிலிருக்கும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மீனம்:
இன்று எதிர்பார்க்கும் வங்கி கடனுதவிகள் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட முடியாது. வரும் வாய்ப்புகளையும் பிறர் தட்டிச் செல்வார்கள். நிறைய போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7