திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. க‌ட்டுரைக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2024 (14:42 IST)

2025ல் கடகம், சிம்மம், கன்னி ராசியினர் வழிபட வேண்டிய கும்பகோண பரிகாரக் கோயில்கள்! | 2025 New Year Astrology Horoscope

Kumbakonam Parigaram Temples
2025 New Year Astrology Horoscope: 12 ராசிகளையும் நலம் அருளும் தெய்வங்களின் சிறப்பு வாய்ந்த கோவில்களில் சென்று இந்த ஆண்டில் தரிசனம் செய்து பரிகாரம் செய்வதன் மூலம், தீவினைகள் அகற்றி தெய்வ அருள் பெறலாம். இது இந்த ஆண்டை சிறப்பான ஒன்றாக மாற்ற உங்களுக்கு உதவும்.


 
12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகாரக் கோயில்கள் ஜோதிட நிபுணர்கள், ஆன்மீக அறிஞர்களால் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி கோயில் நகரங்களான கும்பகோணம், காஞ்சிபுரம் இரண்டு நகரங்களிலும் 12 ராசிகளுக்கான பரிகாரத் தலங்கள் தனித்தனியாக உள்ளன.
கும்பகோணத்தில் உள்ள 12 ராசிகளுக்கான பரிகாரத் தலங்களை காண்போம்.

கடகம்: கடக ராசியினருக்கு பரிகாரக் கோயிலாக விளங்குவது கும்பகோணத்தில் மடத்துத் தெருவில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவில். திருப்பதி அருகே காளஹஸ்தி இருப்பதை போல, தென் திருப்பதியாக விளங்கும் உப்பிலியப்பன் கோவில் அருகே அமைந்துள்ள தென்காளஹஸ்தியான இத்தலம். இந்த கோயிலில் நவக்கிரஹ சன்னதி தவிர ராகு பகவானுக்கு தனி சன்னதியும் உள்ளது இதன் மற்றுமொரு சிறப்பு. காஞ்சி மகா பெரியவர் தரிசனம் செய்த ஸ்தலம் இது.

Kalahastheeswarar Temple Kumbakonam

 
இங்கு கல்யாணசுந்தரமூர்த்தி, அன்னை கார்த்தியாயினியுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். மகாமகத்தன்று தீர்த்தவாரிக்காக சுவாமி எழுந்தருள்வார். ராகு கால துர்க்கை பூஜை இங்கு விசேஷம். சர்வரோக நிவாரணங்களுக்காக பலரும் இங்கு வேண்டி செல்கின்றனர்.

சிம்மம்: சூரியனை ராசிநாதனாக கொண்ட சிம்ம ராசியினருக்கு பரிகாரத் தலமாக விளங்குவது கும்பகோணத்தின் பாணாத்துறையில் அமைந்துள்ள பாணபுரீஸ்வரர் கோயில். உலகம் அழிந்த நாளில் தண்ணீரில் மிதந்த கும்பத்தை சிவபெருமான் பாணத்தை எய்தி உடைத்த தலம் என்பதால் கோயிலுக்கு பாணபுரீஸ்வரர் திருக்கோயில் என்றும், ஊருக்கு பாணாத்துறை என்றும் பெயர் வரலாயிற்று

Banabureeswarar Temple kumbakonam

 
மகாமக தீர்த்தவாரியில் எழுந்தருளும் சிறப்பு மிக்க கோயில்களில் பாணபுரீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று. நந்தி தேவரிடம் சாபம் பெற்ற வியாச முனிவர் இஸ்தலத்திலே லிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டு சாபம் நீங்க பெற்றார். வியாசலிங்கம் என்ற பெயரிலேயே அந்த லிங்கம் இஸ்தலத்திலே வணங்கப்பட்டு வருகிறது. சோம்பலான ஆட்கள் சுறுசுறுப்பாக மாற இங்குள்ள சோமகலாம்பாளை வழிபடுகிறார்கள்.

கன்னி: கும்பகோணம் மகாமக குளத்தின் வடகரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் கன்னி ராசியினருக்கான கும்பகோண பரிகாரத் தலமாக அமைந்துள்ளது. ராவணனை கொல்ல ருத்ராம்சம் வேண்டி ராமபிரான் இத்தலத்திலே வணங்கி ருத்ராம்சம் பெற்றதால் இத்தலத்திற்கு காரோணம் என்ற பெயரும் உண்டு.
Kasi viswanathar temple kumbakonam


நதிகளும், நவக்கன்னிகளுமான கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, காவிரி, துங்கபத்திரை, கிருஷ்ணா, சரயு இங்கே ஈசனை வணங்கி மகாமக நீர்த்தத்தில் நீராடி, மக்கள் தங்களில் கரைத்த பாவங்களை அவர்கள் மகாமக குளத்தில் கரைத்தனர்.

திருஞானச்சம்பந்தரின் பாடல் பெற்ற இஸ்தலத்திலே மூலவராக காசி விஸ்வநாதர் காட்சி தருகிறார். தயார் விசாலாட்சி அருள் பாலிக்கிறார். பெண்கள் ருதுவடைதல், திருமண தடைகள், பாவங்கள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

Edit by Prasanth.K