1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2020 (09:47 IST)

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 26/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

கடகம்:
 
இன்று கடக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து  வேற்றுமை ஏற்படலாம்.
 
தனுசு:
 
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும்.
 
மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு குடும்ப செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின்போது கவனம் தேவை. அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை ஏற்கும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது.
 
கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக முடிய கவனம் தேவை.