ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (04:00 IST)

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 09/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

1. மேஷம்:
 
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை சமாளித்து விடுவீர்கள். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். முயற்சிகளில் எதிர்பார்த்த, சாதகமான பலன் கிடைக்கும்.
 
2. கடகம்:
 
இன்று கடக ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரத்தில் சரக்குகளை விற்பதில் வேகம் இருக்கும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். சக ஊழியர்களின் உதவிகரமாக இருப்பார்கள்.
 
3. சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி  கிடைக்கும்.
 
4. கன்னி:
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு மாணவர்களுக்கு சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் முன்னேற்றமும், பாராட்டையும் பெறுவீர்கள். எதிர்பார்த்த  பணம் வரவு இருக்கும்.
 
5. தனுசு:
 
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு எல்லோரிடமும் அனுசரித்து பேசுவதின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கி உற்சாகம் உண்டாகும்.
 
6. மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரம் லாபம் இருக்கும். போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்கவும், புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளும் பலன் கிடைக்கும்.
 
7. கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். எதிர்பாராத பணவரத்து  இருக்கும்.