திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (05:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (01-03-2020)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமைந்து கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும். மக்களின் ஆதரவும் பெருகும்.
மறைமுக வருவாய்கள் பெருகும்.
அதிர்ஷ்டநிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 9

ரிஷபம்:
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், லட்சுமி கடாட்சமான நிலையும் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். பிரிந்தவர்கள்கூட ஒன்றுகூடி மகிழ்வார்கள். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்-வாங்கலிலும் நல்ல லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 5

மிதுனம்:
இன்று சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறி மன நிம்மதியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு யாவும் கிடைக்கப்பெறும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
அதிர்ஷ்டநிறம்: பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7

கடகம்:
இன்று நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேன்மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் நிலவினாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.
அதிர்ஷ்டநிறம்: ஊதா, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4

சிம்மம்: 
இன்று பிரயாணத்தில் தடங்கல் ஏற்படும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். அரசுவழியில் பல உதவிகளும் தேடிவரும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் பெருகும். பொருளாதாரமும் மேம்படும். மாணவர்கள் கல்வியில் பல சாதனைகளைப் படைப்பார்கள்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

கன்னி:
இன்று நீங்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவுகள், தேவையற்ற வாக்குவாதங்கள் போன்றவற்றால் மன நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலைகளே நிலவும். நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது உத்தமம்.
அதிர்ஷ்டநிறம்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 5

துலாம்:
இன்று வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளிலும் எதிர்பார்த்த சாதகப்பலனை அடைவதில் காலதாமதம் உண்டாகும். உடல்நிலையும் சிறப்பாக அமையும் என்று கூறமுடியாது. உத்தியோகஸ்தர்களும் அடிக்கடி விடுப்பு எடுக்கக்கூடிய சூழ்நிலைகளுக்கு ஆளாவார்கள்.
அதிர்ஷ்டநிறம்: பிரவுன், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

விருச்சிகம்:
இன்று எதிர்பாராத இடமாற்றங்கள் வீணான அலைச்சல்களை ஏற்படுத்திவிடும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் தொழிலை அபிவிருத்திச் செய்ய முடியாத நிலைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

தனுசு:
இன்று எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்த்தால் ஓரளவுக்கு முன்னேறமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. மாணவர்கள் கண்டிப்பாக கல்வியில் அதிக கவனம் செலுத்துவதே நல்லது.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

மகரம்:
இன்று சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். நெருங்கியவர்களைச் சற்று அனுசரித்துச் சென்றால் அனுகூலமான பலனை அடைவீர்கள்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, கருநீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 8

கும்பம்:
இன்று கொடுக்கல்-வாங்கலில் மட்டும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைச் சிறிது காலத்திற்குத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உதவிகள் கிடைத்தாலும் பொறுப்புகளும் சற்று அதிகரிக்கவே செய்யும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, வெளிர்நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

மீனம்:
இன்று திருமண சுபகாரிய முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சாதகமான நற்பலனைப் பெறுவார்கள். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெற்று தொழிலை அபிவிருத்திச் செய்யமுடியும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவந்தாலும் பணவரவில் சில தடைகளும் நிலவும்.
அதிர்ஷ்டநிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4