மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 9, 18, 27

Sugapriya Prakash| Last Updated: சனி, 29 பிப்ரவரி 2020 (18:47 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...


பேச்சில் தெளிவு கொண்ட ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனதில் புது திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டாகும். வீண் பகை, மன சஞ்சலம், தேவையற்ற செலவு ஏற்பட்டாலும் செலவு கட்டுக்குள் இருக்கும். மன சஞ்சலம் தீரும். பகைகள் தொல்லை தராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம்.

மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பெண்களுக்கு கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகபடுத்தி படிப்பது நல்லது.
 
பரிகாரம்:  முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.


இதில் மேலும் படிக்கவும் :