மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25

Sugapriya Prakash| Last Modified சனி, 29 பிப்ரவரி 2020 (18:35 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு... 


ஏற்றத்தாழ்வுகள் பார்க்காமல் அனைவரிடமும் சரிசமமாக பழகும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த  காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும்.  முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும்.

திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.  வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம். பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில்  வெற்றி பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். அரசியல்துறையினருக்கு எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.
 
பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.


இதில் மேலும் படிக்கவும் :