இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (04-06-2019)!

செவ்வாய், 4 ஜூன் 2019 (05:00 IST)

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6 
 
ரிஷபம்:
இன்று சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். லாபத்தையும் பெறுவீர்கள் 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6 
 
மிதுனம்:

இன்று நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சாமர்த்தியமாக பேசி காரியத்தை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7
 
கடகம்:
இன்று கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7
 
சிம்மம்:
இன்று தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5 
 
கன்னி:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை  எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5 
 
துலாம்:
இன்று ஏற்றுமதி சம்பந்தமான துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3
 
விருச்சிகம்:
இன்று ஆன்மீக நாட்டம் உண்டாகும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும். உறவினர் நண்பர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
 
மகரம்:
இன்று வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். 
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 
 
கும்பம்:
இன்று சுப காரியங்கள் குடும்பத்தில் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மற்றும் ஒரு நல்ல நாள். தீடீரென உறவுகள் வந்து ஆச்சரியப் பட வைப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 
 
மீனம்:
இன்று நினைத்ததை சாதிப்பீர்கள். சிக்கன நடவடிக்கை மேற்கொள்வதால் வாழ்க்கைத்துணையின் பாராட்டை பெறுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்




இதில் மேலும் படிக்கவும் :