வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. 2020 ஆண்டு பலன்கள்
Written By Sasikala
Last Updated : சனி, 28 டிசம்பர் 2019 (14:15 IST)

2020 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - சிம்மம்

சிம்மம்: (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்) - அஞ்சா நெஞ்சமும், கம்பீரமான பேச்சும் உடைய சிம்ம ராசியினரே நீங்கள் எதற்கும் கலங்காதவர்.  இந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண் கவலை இருக்கும். மற்றவர்கள்  விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
 
வெளிவட்டார தொடர்புகளில்  கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான  அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை  அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக  உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.
 
குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன்  உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு  பேசுவது நல்லது.  பிள்ளைகள்  நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.  எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.
பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
 
கலைத்துறையினருக்கு டென்ஷன் உண்டாகலாம். உடன் இருப்பவர்களிடம் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது  நல்லது.  எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல்,  வாங்கலில் கவனம் தேவை. 
 
அரசியல்துறையினர் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி  இருக்கும்.
 
மகம்:
 
இந்த ஆண்டு உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர்  குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.
 
பூரம்:
 
இந்த ஆண்டு ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்.  சேமிப்பும்  அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம்  இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.
 
உத்திரம்:
 
இந்த ஆண்டு கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது  வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். ஜாதக தசாபுக்தியை அனுசரித்து  தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில்  பிரச்சனை இருக்காது.
 
பரிகாரம்:  ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில்  சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.