1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. 2020 ஆண்டு பலன்கள்
  4. 2020 English New Year Benefits - Aries

2020 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மேஷம்

மேஷம்
மேஷம் : (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்) - அடக்கத்தோடும், அன்புடனும் பழகும் மேஷராசியினரே உங்களுக்கு தற்பெருமை இருக்கும். இந்த வருடம் ராசியாதிபதி செவ்வாயின் சஞ்சாரம் நன்மையை தரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். 

சகோதரர்கள் மூலம்  நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும். ராசிக்கு 9ல் கேதுவுடன் குரு சேர்ந்து சஞ்சாரம் செய்வதால்  புதிய வாகனங்கள் சேர்க்கை இருக்கும்.
 
தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது  நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.
 
பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள்  கிடைக்கும்.
 
கலைத்துறையினருக்கு தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். உடன் பணிபுரியும் நபர்கள் மூலம்  நன்மை உண்டாகும்.  பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும்.
 
அரசியல் துறையினருக்கு புதிய முடிவுகள் எடுக்கும் போது கவனம் தேவை. ரகசியங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.  கடன்  விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். 
 
மாணவர்களுக்கு  கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை. 
 
அஸ்வினி:
 
இந்த ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள்.  எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள்  தாமாகவே விலகி விடுவார்கள். பணவரத்து கூடும்.
 
பரணி:
 
இந்த ஆண்டு குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி  குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
 
கார்த்திகை:
 
இந்த ஆண்டு சாதக பாதகங்களை பற்றி கவலைப்படாமல் எந்த காரியத்தை யும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். 
 
பரிகாரம்:

தேவி கருமாரியம்மனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.
About Writer
Sasikala