புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. 2020 ஆண்டு பலன்கள்
Written By Sasikala
Last Updated : சனி, 28 டிசம்பர் 2019 (14:15 IST)

2020 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மிதுனம்

மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்) - எந்த இக்கட்டான நிலையையும் சமாளிக்கும் திறமை உடைய  மிதுன ராசியினரே நீங்கள் பிடிவாத குணம் உடையவர். எடுத்த முடிவில் மாறாதிருப்பவர். 

இந்த வருடம் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன்  கருத்து  வேற்றுமை ஏற்படாமல் கவனமாக  இருப்பது நல்லது. 
 
தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.  ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேல்  அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் கேதுவுடன் சஞ்சாரம் செய்வதால்  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.
 
பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். கலைத்துறையினர் அனுசரித்து போவது நன்மைதரும். வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.  அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும்.
 
அரசியல் துறையினர் எடுத்திருக்கும் பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது   தாமதப்படும். நண்பர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை.   பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.
 
மிருகசீரிஷம்:
 
இந்த ஆண்டு வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க  முடியும். எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம்.
 
திருவாதிரை:
 
இந்த ஆண்டு உங்கள் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது.
 
புனர்பூசம்:
 
இந்த ஆண்டு தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். 
 
பரிகாரம்: அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்தில் தாயாரை வணங்கி வர முன் ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு  திருமணம் கைகூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன்.