வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கட்டுரைகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2023 (11:03 IST)

கந்த சஷ்டி 6 நாட்கள் கொண்டாடப்படுவதன் காரணம் என்ன தெரியுமா?

Lord Murugan
கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தில் நடைபெறும் கந்தசஷ்டி விழா முருக பெருமானுக்கு மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும்.



ஆறுமுகனாக போற்றப்படும் முருக பெருமானின் பெருமைகளை குறிக்கும் விதமாக ஆறு நாட்கள் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழாவில் ஆறாவது நாளில் முருகபெருமான் சூரபத்மனை வதம் செய்த சூரசம்ஹார நாள் கொண்டாடப்படுகிறது. இந்த 6 நாட்களும் முருகனின் ஆறு வளர்ச்சிகளை மையப்படுத்தி கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து மகாபாரதத்தின் சல்யாபர்வத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் நாளில் கந்தன் கருவாக உருவாகிறான். இரண்டாம் நாளில் எல்லாரும் பார்க்கும்படி தோன்றுகின்றான். மூன்றாம் நாளில் குழந்தையாகின்றான். நான்காம் நாள் அங்கங்கள் வளர்ந்து குமரனாக தோன்றி சேனாதிபதியாக மாறுகிறான். ஐந்தாம் நாள் சிவனுடைய வில்லை எடுத்து தேவர்கள் தொழ வீரச்செயல்களை புரிகிறான். ஆறாம் நாள் சக்தி என்ற வேலாயுதத்தை எடுத்து கர்ஜனை செய்து கிரௌஞ்ச மலையை வீசி பிளக்கிறான் என்று கூறப்பட்டுள்ளது.

மகாபாரதம் தவிர்த்து ராமாயணத்திலும் முருகனின் தோற்றம் குறித்த கதை உள்ளது. ஆனால் பொதுவாக முருக பெருமானின் அறுபடைகளும் உணர்த்தும் ஆறு செயல்களையும் போற்றும் விதமாக சஷ்டி கொண்டாடப்படுவதாக் ஐதீகம். இந்த ஆறாம் நாளில்தான் சூரபத்மனை முருகபெருமான் சம்ஹாரம் செய்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அருகில் உள்ள முருகபெருமான் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது சகல நன்மைகளையும் அருளும்.

Edit by Prasanth.K