வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (13:23 IST)

கார்த்திகை முதல் நாள்; இந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது பூரண பலன் தரும்!

நாளை கார்த்திகை மாதத்தின் முதல் நாள் தொடங்கும் நிலையில் குறிப்பிட்ட சில ராசிக்கார்கள் பரிகாரம் செய்து கொள்வது பூரண பலனை தரும்.



நாளை ஐப்பசி மாதம் முடிந்து முருகபெருமானுக்கு உகந்த நாளான கார்த்திகை மாதம் தொடங்குகிறது. இந்த மாதம் சபரிமலைவாசன் சுவாமி ஐயப்பனுக்கும் உகந்த மாதமாகும். பஞ்சாங்கப்படி இந்த கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களின் கீழ் வரும் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது பூரண நலனை தரும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் நாளை கார்த்திகை முதல் நாளில் நீராடி அருகில் உள்ள ஸ்தலங்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது வாழ்வின் துன்பங்களை நீக்கி சௌபாக்கியங்களை அளிக்கும்.

அருகே நவக்கிரக ஸ்தலங்கள் இருந்தால் அங்கே சென்று நெய் விளக்கேற்றி வழிபடுவது நவக்கிரகங்களின் அருளை இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிபூரணமாக அருளும். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கார்த்திகை மாதம் விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு வாய்ந்தது.

Edit by Prasanth.K