செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2016 (17:26 IST)

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட விஜயகாந்த்

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட விஜயகாந்த்

உள்ளாட்சி தேர்தலில், தேமுதிக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.


 

 
உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம். ஆளும் கட்சியான அதிமுக, வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. எதிர்கட்சியான திமுகவும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. மதிமுக, தாமக என அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பாக களம் இறங்கிவிட்டன. 
 
ஆனால், தேமுதிக என்ற கட்சி இருக்கும் இடமே தெரியாமல் இருந்தது. சட்டசபை தேர்தலில் சந்தித்த தோல்வியின் காரணமாக, இந்த தேர்தலில் போட்டியிட பெரும்பாலானோர் முன்வரவில்லை என்று கூறப்பட்டது. 
 
ஆனால், தேமுதிகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை தற்போது விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.  இதிலிருந்து, உள்ளாட்சி தேர்தலில்  தேமுதிக தனித்து போட்டியிடுகிறது என்பது உறுதியாகியுள்ளது.