1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
  4. TTV Dhinakaran team MLA Vettrivel request Speaker Dhanapal to remove Korada

அரசு கொறடாவை நீக்கக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ மனு

அதிமுக
அரசு கொறடா ராஜேந்திரனை நீக்கக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சபாநாயகர் தனபாலிடம் மனு கொடுத்துள்ளார்.


 

 
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தாங்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தனது பெரும்பான்மையை இழந்தார். இதைத்தொடர்ந்து வேறு முதலமைச்சர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முன்வைத்தனர்.
 
இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் பரிந்துரைந்தார். இதன் விளைவாக தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சபாநயாகரை சந்தித்து அரசு கொறடா ராஜேந்திரனை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார்.
 
அதாவது அரசு கொறடா ராஜேந்திரன் அதிகார துஷ்பிரோயகத்தில் ஈடுப்பட்டதாக கூறி அவரை நீக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்ட்டுள்ளார்.
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
ஆண்கள் கழிவறையில் மாணவியை நிற்க வைத்த ஆசிரியர்: இப்படி ஒரு தண்டனையா?