வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2017 (22:30 IST)

அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி அதிரடி உத்தரவு: திருப்பம் நேருமா?

அதிமுகவின் இரண்டு அணிகள் இணைந்ததில் இருந்தே தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தினகரனின் கை ஓங்கி கொண்டே இருந்தாலும், ஆட்சியை கவிழ்க்கவோ, முதல்வரை மாற்றவோ தினகரன் நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் மத்திய அரசு அவரை சரியான முறையில் 'கவனிக்கும்' என்ற அசைக்க முடியாத நம்பிக்கை முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இருக்கின்றதாம்



 
 
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி நாளை அனைத்து அமைச்சர்களும் சென்னைக்கு வரவேண்டும் என்றும் அமைச்சர்களுடன் ஒரு முக்கிய ஆலோசனை செய்யவேண்டியதுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாம்
 
அனேகமாக அந்த முக்கிய விஷயம், பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கும் நடவடிக்கை குறித்துதான் இருக்கும் என்று கூறப்படுகிறது. பொதுகுழுவிற்கு பின்னர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வர் அணியில் திரும்ப வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.