செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (00:30 IST)

ரஜினியையும் வரவேற்கிறார், கமலையும் வரவேற்கிறார்! என்ன ஆச்சு இவருக்கு?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தபோது, பல அரசியல்வாதிகள் ரஜினியை எதிர்த்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மட்டும் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக அறிவித்தார்



 
 
இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதாக கோடிட்டு காட்டிய நிலையில் கமலையும் அரசியலில் வரவிருப்பதை வரவேற்பதாக அறிவித்துள்ளார். இவருடைய மனதில் என்னதான் இருக்கின்றது? இவருக்கு என்ன ஆச்சு? என்று பொதுமக்கள் டுவிட்டரில் கேள்வி கேட்டு வருகின்றனர்.
 
கமல்ஹாசன் அரசியல் வருகை குறித்து கமல் கூறியதாவது:  ஊழலுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ள கமலின் செயல் அரசியலுக்கு வருவதற்கான முயற்சி. ஒரு சில இடங்களில் பாஜகவை விமர்சிப்பதால்  கமலை அக்கட்சியினர் எதிர்க்கின்றனர். ஜெயலலிதாவின் வெற்றிடத்தை பயன்படுத்தி நடிகர்கள் அரசியலுக்கு வர முயற்சிக்கின்றனர்' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.