கருணாநிதியின் சாமர்த்தியம் ஸ்டாலினிடம் கிடையாது. எச்.ராஜா
ஒருபக்கம் குடியரசு தலைவர் தேர்தலில் தங்களுடைய வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிக்கும்படி பாஜக மேலிடம் மு.க.ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதேநேரத்தில் இன்னொரு பக்கம் தமிழக பாஜக தலைவர்கள் வழக்கம்போல் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டும் வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் 'கருணாநிதியின் சாமர்த்தியம் ஸ்டாலினிடம் கிடையாது என்று கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவருக்கான தகுதி மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என்றும், கருணாநிதியின் சாமர்த்தியம் ஸ்டாலினிடம் கிடையாது என்றும் தெரிவித்தார்.
மேலும், ‘’தற்போது தமிழகத்தில் நடைபெறும் அதிமுக அரசு, முழுவதுமாக, 5 ஆண்டுகள் ஆட்சி நடத்த வேண்டும் என்றே பாஜக விரும்புகிறது. ஆனால், நடக்கும் அரசியல் குழப்பங்களை பார்த்தால், அது சந்தேகமாக உள்ளது,’’ என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.