வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2017 (16:00 IST)

பின் வாங்க உள்ள தினகரன்?: இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனால் இது தான் முடிவு!

தேர்தல் ஆணையத்தின் நாளைய முடிவில் தான் இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்கப்படும் என்பது தெரியவரும். 


 
 
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெரும் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்து அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கியது.
 
சசிகலா தரப்பு தினகரன், ஓபிஎஸ் தரப்பு மதுசூதனன், தீபா, திமுக தரப்பு மருதுகணேஷ் மற்றும் பிற கட்சி வேட்பாளர்கள் என ஆர்.கே.நகர் பரபரப்பாய் மாறியுள்ளது.
 
அதன் பின்னர் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற குழப்பம் எழுந்தது. இதற்கான பதிலை நாளை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
 
இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமியுடன் பேசியதைத் தொடர்ந்து நிச்சயம் இரட்டை இலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் டிடிவி தினகரன். 
 
இதனையடுத்து இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவேன்; இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என திட்டவட்டமாக கூறினார் தினகரன்.
 
ஆனால், அதே நேரத்தில் இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் தினகரன் தேர்தலில் போட்டியிடுவாரா? என்கிற சந்தேகமும் சசிகலா அணியில் எழுந்துள்ளது. 
 
தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு இல்லாத நிலையில் அவர் போட்டியிடுவது இரட்டை இலை சின்னத்தை மட்டுமே நம்பி. சின்னம் கிடைக்காத நிலையில் தினகரன் மற்றொரு வேட்பாளரை அறிவிக்கவும் வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.