வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: புதன், 17 மே 2017 (07:08 IST)

ரஜினி அரசியலுக்கு வருவார்! நெருக்கமான வட்டாரங்கள் தகவல்

ரஜினியின் முந்தைய அரசியல் பேச்சுக்கும் தற்போதைய அரசியல் பேச்சுக்கும் மிகுந்த வித்தியாசம் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றனர். எனவே ரஜினி இம்முறை அரசியலுக்கு வருவது உறுதி என்றும் அவரை கேலி, கிண்டல் செய்து வருபவர்களுக்கு சரியான பதிலடி விரைவில் கொடுப்பார் என்றும் கூறுகின்றனர்.




பாஜக ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டது. ஆனால் ரஜினி அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சிதான் என்பதை முடிவுசெய்துவிட்டாராம். தனது ரசிகர்கள் அனைத்து மதங்களிலும் இருக்கின்றனர். எனவே பாஜகவுடன் இணைந்து மற்ற மத ரசிகர்களின் மனதை நோகடிக்க அவர் விரும்பவில்லையாம்

ஜெயலலிதா மரணம், கருணாநிதி உடல்நலமின்மை ஆகியவை காரணமாக தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாகவும், 1996க்கு பின்னர் ரஜினி அரசியலுக்கு வரவே இதுவே சரியான தருணம் என்றும் அவர் நினைப்பதாக கூறுகின்றனர். ரஜினி தனது நெருங்கிய வட்டாரத்தில் இதுகுறித்து கூறியபோது, '‘அரசியல்ல ஒவ்வொரு செங்கல்லும் கெட்டுப்போய் இருக்கு. எனக்கான அரசியல் அழைப்பு எப்பவுமே இருக்கு. இதுல நான் முடிவு பண்ண ஒண்ணும் இல்லை. பாபாதான் முடிவு பண்ணனும். நான் அரசியலுக்கு வந்தா மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னுதான் வருவேன். மத்தபடி பேருக்கோ, புகழுக்கோ, பணத்துக்கோ இல்லை’ எனச் சொன்னாராம்.