1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 17 மே 2017 (05:16 IST)

வடகொரியவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த தயார்: ஐ.நா தூதர்

வடகொரியா மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் போர் தொடுக்கும் என்று கூறப்பட்டு வந்தாலும் இந்த போர் அணு ஆயுத போராக இருக்கும் என்பதால் உலகின் பாதி பகுதி இந்த போரால் அழியும் ஆபத்து இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.



 


எனவே வடகொரியாவிடம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி அணு ஆயுத சோதனை விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் போரை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்காவுக்கு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று நடந்த ஐநா சபை கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறும் போது, அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்துவதை வடகொரியா நிறுத்தினால், அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறினார். மேலும் வடகொரியா மீதான புதிய பொருளாதாரத் தடைகளை நீக்க ஐ.நா. பரிசீலிக்கும் என்றும் ஹாலே தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு நம்பிக்கை தருவதாக இருப்பதாகவும் விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தென்கொரியா அதிபர் தெரிவித்துள்ளார்