அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கு எதிராக சில அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதாகவும், ஓ.பி.எஸ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஐவர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. தினகரனின் செயல்பாடுகளால் ஆட்சியை பறிகொடுத்து விடுவோம் என்கிற பயத்திற்கு சில அமைச்சர்கள் வந்திருப்பதாகவும், அதனால் தினகரனை ஓரங்கட்டும் முயற்சியில் அவர்கள் ரகசியமாக ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று சிறைக்கு...