1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 22 மே 2017 (23:01 IST)

மாப்பிள்ளையே வராத கல்யாணத்திற்கு எதற்கு இத்தனை கூத்து? ஸ்டாலினை கலாய்க்கும் நெட்டிசன்கள்

திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டத்தை மிகச்சிறப்பாக நடத்த வேண்டும் என்பதில் மிகத்தீவிரமாக இருக்கின்றார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.





ஜூன் 3ம் தேதியன்று, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்த பிரமாண்ட நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளை அவரே முன்னின்று பார்த்து வருகின்றார்.

இந்த வைரவிழாவில் பங்கேற்க ராகுல்காந்தி உள்பட பல தேசிய தலைவர்களும், பல மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் முதல்வர்களும் வருகை தரவுள்ளனர்.

இந்த நிலையில் யாருக்காக இந்த விழா நடத்தப்பட இருக்கின்றதோ, அவரே இந்த விழாவில் கலந்து கொள்வது சந்தேகம் என தெரிகிறது. ஆம், தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அளவிற்கு கருணாநிதியின் உடல் இல்லை என்பது தெரிகிறது.

இந்த நிலையில் மாப்பிள்ளையே வராத திருமணத்திற்கு எதற்கு இத்தனை பில்டப் என்று வழக்கம்போல நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.