செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2017 (16:56 IST)

ரசிகர்களின் பணத்தை திருப்பி அனுப்பும் கமல்ஹாசன் - திட்டம் என்ன?

அரசியல் கட்சி தொடங்குவதற்கு ரசிகர்கள் அனுப்பும் பணத்தை நடிகர் கமல்ஹாசன் திருப்பி அவர்களுக்கே அனுப்பிக் கொண்டிருக்கிறார்.


 

 
அரசியலில் இறங்குவது என முடிவு செய்து விட்டேன். அதற்கு மக்களே பணம் கொடுப்பார்கள் என நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், இது தவறு. மக்களிடம் பணம் வாங்கி அரசியல் நடத்தக்கூடாது என அதிமுக அமைச்சர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரம் சர்ச்சையாக மாறியது.
 
இந்நிலையில், பிரபல வார இதழில் எழுதி வரும் தொடரில் இதுபற்றி கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். 
 
கட்சி தொடங்குவதற்கு மக்களே பணம் கொடுப்பார்கள் என நான் கூறியதை மாற்றி, ரசிகர்கள் கொடுப்பார்கள் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. தற்போது ரசிகர்களிடருந்து எனக்கு கடிதங்களும், பணமும் வரத் தொடங்கியுள்ளது.  ஆனால், இப்போது அதை நான் வங்கினால் அது சட்டவிரோதமாகி விடும். வாங்கி அப்பணத்தை சும்மா வைத்திருக்கக் கூடாது. எனவே, தனிப்பட்டமுறையில் ஒவ்வொருவருக்கும் அதை திருப்பி அனுப்பி வருகிறேன். 
 
இதற்கு அர்த்தம் அதை வாங்க மாட்டேன் என்பதல்ல. சரியான கட்டமைப்பு இல்லாமல் அந்த பணத்தை பெறக்கூடாது. இந்த பணம் என்னுடையது என நீங்கள் நினைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை அந்த பணம் செலவாகிவிட்டால், உங்களிடமிருந்து பணம் பெறுவதற்கு எனக்கு பாக்கியமில்லை என நினைத்து கொள்கிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார்.