ஞாயிறு, 14 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 25 ஜூன் 2017 (09:08 IST)

இளவரசிக்கு முன்னுரிமை; சசிகலாவை ஒதுக்கினாரா தினகரன்??: அதிமுக-வில் அடுத்த பரபரப்பு!!

இளவரசிக்கு முன்னுரிமை; சசிகலாவை ஒதுக்கினாரா தினகரன்??: அதிமுக-வில் அடுத்த பரபரப்பு!!
அதிமுக தற்போது மூன்று பிரிவாக உள்ளது. ஒருபுறம் பன்னீர்செல்வம் அணி, மறுபுறம் முதல்வர் பழனிசாமி அணி இவர்களுக்கு இடையே தினகரன் அணி. அதிமுக கட்சிக்கு இது சோதனை காலம் போலும்.


 
 
தற்போது தினகரன் நான் கட்சியில் இருந்து ஒதுங்க நினைக்கவில்லை. கட்சி இணைப்பு நடவடிக்கைகளில் இருந்து மட்டுமே ஒதுங்கியிருக்க முடிவு செய்திருந்தேன் என கூறிவருகிறார்.
 
இந்நிலையில், கடந்த மாதத்தில் மூன்றாவது முறையாக பெங்களூரு சிறையில் நேற்று சசிகலாவைச் சந்திக்க சென்றார் தினகரன். ஆனால், அங்கு சசிகலாவை சந்திக்காமால் இளவரசியை மட்டும் சந்தித்து வந்துள்ளார். இதனை செய்தியாளர்களிடமும் தெரிவித்தார்.
 
தினகரன் சசிகலாவை சந்திக்கவில்லையா, இல்லை சசிகலா தினகரனை சந்திக்க மறுத்துவிட்டாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால், தினகரனின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருந்த சசிகலா தினகரனைச் சந்திக்க மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது.