வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 14 மே 2017 (09:18 IST)

திமுக இருக்கும் வரை இது நடக்காது: துரைமுருகன் அவேசம்!!

திமுக கட்சி இருக்கும் வரை தமிழகத்திற்குள் ஹிந்தியை நுழைய விடமாட்டோம் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


 
 
திமுக சார்பில் பாஜக அரசை கண்டித்து சென்னை, அமைந்தகரையில் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. இதற்கு ஜெ.அன்பழகன் தலைமை வகித்தார்.
 
இந்த கருத்தரங்கில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் துரைமுருகன் பேசியதாவது, தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திமுக பெரும் பங்கு வகித்தது. மத்திய அரசு தமிழகத்தில் ஹிந்தியை புகுத்த முயற்சித்து வருகிறது. ஆனால் திமுக இருக்கும் வரை தமிழகத்தில் ஹிந்தியை நுழைய விட மாட்டோம்.
 
நீட் தேர்வு விஷயத்தில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க, எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஜனநாயக முறையில், திமுக ஆட்சிக்கு விரைவில் வரும் என்றார்.