ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (21:25 IST)

அதிமுகவின் புதிய நிர்வாகிகளை அறிவித்தார் தினகரன்

அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் தற்போது புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.


 

 
புதிய நிர்வாகிகளின் பொறுப்புகள் மற்றும் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
அமைப்பு செயலாளர்கள்: கு.ப. கிருஷ்ணன், ஜக்கையன், மேலூர் சாமி 
 
கொள்கை பரப்பு துணை செயலாளர்கள்: நாஞ்சில் சம்பத், இளவரசன் 
 
அமைப்பு செயலாளர்கள்: பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்காடசலம்
 
இதுகுறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
ஏற்கனவே நிறைய நிர்வாகிகள் இருந்தாலும் மேலும் அதிமுக சிறப்பாக செயல்பட புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் தேர்தலை முன்னிட்டு, கழகத்தை பலப்படுத்த புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.   
 
தற்போது சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். தேவைப்படும்போது தலைமை செயலகம் செல்வேன்.