செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 11 ஜனவரி 2017 (15:54 IST)

சசிகலாவையும் ஸ்டாலினையும் எதிர்ப்பவர்கள் தீபாவின் பின்னால்!!

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் சென்னையில் உள்ள தீபாவின் இல்லம் நோக்கிச் சென்று, அவரை அரசியலில் இறக்க திட்டமிட்டு வருகின்றனர். 


 
 
மேலும், சசிகலாவை வீழ்த்த வேண்டும் என, கோரிக்கை வைக்கின்றனர். இந்நிலையில், தி.மு.க.வின் தலைவர் பதவிக்கு ஈடான பதவியாக செயல் தலைவர் பதவி உருவாக்கி, அதில் சகல அதிகாரங்களையும் ஸ்டாலின் உள்ளடக்கிகொள்வது, கட்சிக்குள்ளேயே சிலருக்கும் பிடிக்கவில்லை. 
 
தொண்டர்கள் சிலர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஸ்டாலினை பிடிக்காத தொண்டர்கள், அக்கட்சியில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளனர். 
 
தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலரும், மாவட்ட நிர்வாகிகள் பலரும், ஸ்டாலின் தலைமையை ஏற்க முடியாமல், தீபாவை நோக்கி வருவதாகக் கூறப்படுகிறது. 
மொத்தத்தில், தமிழக அரசியல் கடும் பரபரப்புடன் நகர்கிறது.