வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Updated : புதன், 22 மார்ச் 2017 (10:40 IST)

போகிற இடத்திலாவது விசுவசமாக இருங்கள்: நிர்மலாவுக்கு சி.ஆர்.சரஸ்வதி அறிவுரை

நேற்று காலை நடைபெற்ற அதிமுக நட்சத்திர பேச்சாளர்களின் கூட்டத்தில் நிர்மலா பெரியசாமி ஒரு புயலை கிளப்பிவிட்டது அதிமுகவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா அணியின் கூட்டத்தில் ஓபிஎஸ் குறித்து பெருமையாக பேசிய நிர்மலா பெரியசாமியை வளர்மதி மற்றும் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் உண்டு இல்லை என்று ஆக்கிவிட்ட விவகாரம் தெரிந்ததே




இதனால் அதிருப்தி அடைந்த நிர்மலா, நேற்று மாலையே ஓபிஎஸ் அவர்களுக்கு தனது ஆதரவு என்று அறிவித்துவிட்டார். இதனால் கூடுதலாக ஒரு பேச்சாளரை பெற்றுள்ள ஓபிஎஸ் அணி அவரை ஆர்கே நகர் தேர்தலுக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளது

இந்நிலையில் நிர்மலாவின் வெளியேற்றம் குறித்து கருத்து தெரிவித்த சி.ஆர்.சரஸ்வதி, 'நிர்மலா பெரியசாமி போகிற இடத்திலாவது விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் அவர் விரைவில் தான் எடுத்த முடிவு தவறு என்பதை புரிந்து கொள்வார்' என்றும் கூறினார்.

இன்று இரட்டை இலை குறித்த தேர்தல் கமிஷனின் முடிவு வெளிவந்தவுடன் சசிகலா கூடாரம் காலியாகிவிடும் என்றும் ஓபிஎஸ் அணி வலுவடையும் என்றும் கூறபடுகிறது.