திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2016 (18:48 IST)

சின்னம்மா தான் பெரியம்மாவின் மனசாட்சி: அதிமுக நிர்வாகி

அ.தி.மு.க.வின் அச்சானி சசிகலாதான். சின்னம்மாதான் பெரியம்மாவின் மனசாட்சி என்று அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார்.


 

 
ஜெயலலிதா மறைவுக்கு பின் ஒருவார காலமாக சசிகலா பற்றியே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி பொறுப்பை ஏற்குமாறு அதிமுக நிர்வாகிகள் கொரிக்கை வைத்துள்லனர். அதைத்தொடர்ந்து அவரை அனைவரும் சின்னம்மா என்ற பெயரில் அழைத்து வருகின்றனர்.
 
சசிகலாவை சின்னம்மா என்ற பேனர்கள் எல்லாம் வைத்து வருகின்றனர். ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் அம்மா என்ற வார்த்தையும் மறைந்துவிட்டது. இப்போது எல்லாம் சின்னம்மா சசிகலா மட்டும்தான் என்பது போல் தோற்றம் உள்ளது.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பொன்னையன் கூறியதாவது:-
 
சின்னம்மா சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார். அவருக்காக விதிகள் தளர்த்தப்படும். அதிமுகவுக்கு அச்சானியாக இருப்பவர் சசிகலா, சின்னம்மாதான் பெரியம்மவின் மனசாட்சியாக இருந்தார். சசிகலாவுக்கு எதிராக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்படுகிறது, என்றார்.