1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: புதன், 4 ஜனவரி 2017 (15:46 IST)

சசிகலா கையில் அதிமுக; குரங்கு கையில் பூமாலை : தொண்டனின் கடிதம்

சசிகலா தலைமையில் அதிமுக ஒப்படைத்திருப்பது குரங்கு கையில் பூமாலை கொடுத்ததற்கு சமம் என கருத்து தெரிவித்துள்ள அதிமுக பிரச்சாரப் பேச்சாளர் சிதம்பரம் ஜெயவேல், கட்சியிலிருந்தும் வெளியேறியுள்ளார்.


 

 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
ஜெயலலிதாவால் 5 ஆண்டுகள் கட்சியைவிட்டு நீக்கி பின் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து கட்சியில் இணைந்த சசிகலாவை பதவியில் இருப்போர், தங்கள் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள ஆதரிக்கலாம். கழகத்தின் அடிமட்ட தொண்டன் சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள மாட்டான்.
 
எம்ஜிஆர் இரட்டை இலை சின்னத்தை மட்டும் விட்டுவிட்டு செல்லவில்லை, சின்னம்மாவையும் விட்டுச்சென்றார் என்றார் பண்ருட்டியார். எம்ஜிஆருக்கு ஒரு சின்னம்மா இருப்பதை பண்ருட்டி ராமச்சந்திரன் கூறித்தான் தெரிந்து கொண்டோம்.
 
ஜெயலலிதாவின் இரு கால்களையும் வெட்டி எடுத்துவிட்டு புரட்சிதலைவி நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்; தொண்டையில் துளை போட்டு விட்டு வீட்டில் இருந்து கொண்டு வந்த கிச்சடி சாப்பிட்டார் என அறிக்கைகள் வெளியிட்டனர். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட கட்சி, சசிகலா போன்றோர் கையில் சென்றது குரங்கு கையில் பூமாலை சிக்கியதாகிவிடும்.
 
ஆகையால் கட்சியின் பேச்சாளர் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.