வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: புதன், 29 மார்ச் 2017 (23:58 IST)

மீனவர் பிரிட்ஜோவை கொலை செய்தது விடுதலைப்புலியா? புதுக்கதை விடும் எச்.ராஜா

சமீபத்தில் இலங்கை கடற்படையின் வெறித்தனமான தாக்குதலுக்கு மீனவர் பிரிட்ஜோ பலியான விவகாரம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்த படுகொலைக்கு காரணம் இலங்கை கடற்படையினர்தான் என்று இலங்கையே ஏறக்குறைய ஒப்புக்கொண்டு அதற்கான விசாரணையில் இறங்கியுள்ளது.



 


இந்த நிலையில் மீனவர் பிரிட்ஜோவை ஏன் விடுதலைப்புலிகள் சுட்டு கொலை செய்திருக்கக்கூடாது? என்ற சந்தேகத்தை பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, 'முந்தைய அரசில் 600 மீனவர்கள் சுடப்பட்டனர்.  ஆனால் மோடி ஆட்சியில் அவை பெருமளவு குறைந்து விட்டது. பிரிட்ஜோ படுகொலையை விடுதலைப்புலிகளின் கைக்கூலிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் ஏன் செய்திருக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழக மீனவர்கள் இந்திய எல்லையில் தான் மீன் பிடிக்கிறோம் ஆனாலும் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்கின்றது என கூறிகின்றனர். மீனவர்களிம் வாழ்வாதாரமும், வாழ் உரிமையும் பெரும் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில் ஹெச். ராஜாவின் இந்த கருத்து சமூக ஆர்வலர்களையும், மீனவர்களிடமும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.