திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2017 (20:47 IST)

புதிய கட்சி தொடங்கிய இளைஞர்களுக்கு நடிகர் விவேக் ஆலோசனை

ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் சென்னை மெரீனாவில் இணையத்தால் இணைந்த இளைஞர்கள் சமீபத்தில் தமிழகத்தில் நடந்த அரசியல் குழப்பங்கள் காரணமாக, தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.




நேற்று முன் 'என் தேசம் என் உரிமை' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக எபினேசர், சத்யா, பிரவீணா, சுகன்யா, கார்த்தி, சுதந்திர தேவி, பிரகாஷ், பிரசாத் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் இந்த கட்சியில் உறுப்பினர் சேர்க்கை ஆரம்பித்த ஒருசில நிமிடங்களில் சுமார் 6 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கட்சி குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டரில் கூறியதாவது: இளைஞர்கள் இணையும் அமைப்பு வரவேற்கத்தக்க பிரமிப்பு! ஆயினும் பெருங்கட்சிகளுக்கிணையான, கட்டுமானம் இல்லாததால் நல்லகண்ணு, சகாயம் போன்ற சமூகத்தூயவர்களிடம் ஆசியும், ஆலோசனையும் பெறுதல் நல்லது என்று கூறியுள்ளார்.

விவேக்கின் ஆலோசனையை இளைஞர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.