எதிர்கட்சி செயல் தலைவருடன் நெருக்கம், நெருக்கடியில் சசிகலா: முதல்வரின் வியூகம் என்ன?
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நெருக்கம் காட்டுவதாக நினைத்து சசிகலா கலக்கத்தில் உள்ளாராம்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழக முதல்வர் பதவியில் ஓ.பன்னீர்செல்வத்தை அமர வைத்தது மத்திய அரசு. ஆனால் இதற்கு மன்னார்குடி தரப்பு இடையூறு கொடுத்து வருகிறது.
இதே சமயத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மறைமுகமாக திமுக தரப்பு ஆதரவு தெரிவித்து வருகிறது. தமிழக அரசுக்கு சாதகமாக திமுக பேசி வருகிறது.
கடந்த வாரம் கூடிய தமிழக சட்டசபையில் போலீசார் சென்னை மீனவர்கள் மீது வன் முறையை மேற்கொண்டனர். அப்போது ஸ்டாலின் இந்த விவகாரத்தை முன்வைத்து பேசாமல் ஆளுநர் உரையை புறக்கணித்தார்.
மேலும், ஆளுநரை நேரில் சந்தித்த ஸ்டாலினிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கான மன்னார்குடி கோஷ்டியின் நெருக்கடி குறித்து ஆளுநர் மாளிகை பேசியதாம்.
இந்நிலையில், இதுவரை இல்லாத வகையில் குடியரசு தின நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் ஸ்டாலின் பங்கேற்றாராம். இதனால், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகிழ்ச்சியாகிவிட்டாராம்.
இதனால், சசிகலா மற்றும் மன்னார்குடி பிற தரப்புகளும் கலக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.