திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam

ரஜினி, கமல், விஜய். பாஜகவின் மும்மூர்த்திகள் திட்டம்

கிட்டத்தட்ட வட மாநிலங்கள் முழுவதையும் ஆட்சியை பிடித்துவிட்ட பாஜக அடுத்து முழு முயற்சியுடன் தென்மாநிலங்களை குறி வைக்கின்றது. ஆந்திராவில் பாஜகவின் கூட்டணி ஆட்சிதான் என்பதால் பிரச்சனை இல்லை. பாஜகவின் அடுத்த குறி கர்நாடகம் மற்றும் தமிழகமும்தான். கர்நாடகாவில் ஏற்கனவே பாஜக ஆட்சி செய்திருந்தது என்பதால் அங்கு கொஞ்சம் முயற்சி செய்தால் போதும், ஆட்சியை பிடித்துவிடலாம் என பாஜக நம்புகிறது.





ஆனால் தமிழகத்தின் நிலைமை வேறு. இங்கு மக்கள் மனதில் பதியும் வகையில் உள்ளூர் தலைவர்கள் இல்லாததது பாஜகவுக்கு வீக் பாயிண்ட். எனவே பாஜக தலைமை கோலிவுட் நடிகர்களை இழுக்க முயற்சியில் உள்ளது.

பாஜகவின் முதல் குறி ரஜினி. அவர் கழுவுற மீனில் நழுவுற மீனாக இருந்தாலும், அவரை இம்முறை பாஜக விடப்போவதில்லை என்றே கூறுகிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா இந்த வாய்ப்பு இனியொருமுறை கிடைக்காது என்பதால் ரஜினியை இழுக்க முழு முயற்சி நடந்து வருகிறது.

ஒருவேளை ரஜினி ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அடுத்த டார்கெட் கமல் அல்லது விஜய் என்கிறது பாஜக வட்டாரம். இந்தா மும்மூர்த்திகளில் பாஜகவிடம் சிக்கப்போவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்