திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2017 (10:21 IST)

ஓ.பி.எஸ்-ற்கு மேலும் 2 அதிமுக எம்.பி.க்கள் ஆதரவு - உடையும் சசிகலா கூடாரம்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக மேலும் 2 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின், இதுவரை அவருக்கு 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், மாநிலங்களவை எம்.பி.மைத்ரேயன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
ஆனால், மக்களவை எம்.பி.க்கள் யாரும் இதுவரை அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த கிருஷ்ணகிரி எம்.பி அசோக்குமார் மற்றும் நாமக்கல் எம்.பி ஜி.ஆர் குமார் ஆகியோர் ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் விரைவில் ஓ.பி.எஸ் வீட்டிற்கு வந்து தங்கள் ஆதரவை தெரிவித்து விட்டு, செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
எம்.பி.க்களும் ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு தெரிவிப்பது தொடங்கி விட்டதால், அவருடைய பலம் அதிகரித்து வருகிறது. அதேபோல், சசிகலா தரப்பில் பலம் குறைந்து வருகிறது..