ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 28 நவம்பர் 2024 (13:36 IST)

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண்.. சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்..!

Women Arrest
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண்ணை மும்பை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியை கொலை செய்ய போவதாக மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், பிரதமரை கொலை செய்வதற்கான திட்டமும் ஆயுதமும் தயாராக இருப்பதாக கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது 34 வயது பெண் ஒருவரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்த பெண்ணை விசாரித்தபோது, அவர் எந்தவிதமான குற்றப் பின்னணியிலும் இல்லாதவர் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், அவர் மீது முழுமையான விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும், அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி அவர் மீது விசாரணை நடைபெறும் என்றும் மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva