டென்ஷனை குறைக்கும் சித்தாசனம்

டென்ஷனை குறைக்கும் சித்தாசனம்


Sasikala|
தரைவிரிப்பில் அமர்ந்து இடது பாதத்தை வலது அடித்தொடையை தொடச் செய்து, வலது பாதத்தை இடது கணுக்காலின்மீது வைக்க வேண்டும்.

 


இவ்வாறு செய்யும்போது வலது குதிங்கால் அடிவயிற்றைத் தொட்டு இருக்க வேண்டும். மேலும், இரு கைகளும் முழங்கால்களின் மேல் சின்முத்திரையில் வைக்க வேண்டும்.
 
இரு கைகளையும் சின் முத்திரை தாங்கி கால் முட்டிகள் மீது வைத்து மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். இவ்வாறு 20 நிமிடங்கள் இந்த நிலையில் இருக்க வேண்டும்.
 
நமது உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளை சுத்தம் செய்யும் எளிதான ஆசனம் இது. முதலில் தரையில் அமருங்கள். பின்னர் இடது காலை மடித்து வலது கணுக்காலில் படும்படி மடித்து அமருங்கள். அடுத்தது வலது காலை மடித்து இடது தொடை மீது படும்படி செய்யுங்கள். 
 
பிறகு கைகளை சமநிலைக்கு கொண்டு வந்து பின்னர் நிதானமாக ஒவ்வொரு காலாக பிரித்து நிமிர்த்தி அமர்ந்த பின் எழ வேண்டும். இந்த ஆசனத்தை செய்வதால் மனம் அமைதி அடையும். ரத்த ஒட்டம் சீராகும். பின்புறம் மற்றும் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் குறையும்.
 
சித்தாசனத்தின் பயன்கள்:
 
மார்பு விரிவடையும்.
முதுகெலும்பு, தேகம் பலமடையும்.
மனம் சாந்தமாகும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :