செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (22:07 IST)

குவைத்தில் பிரபல நடிகை ரோஜா கைது?

பிரபல நடிகையும், ஒய்.எஸ்.ஆர் கட்சியின் பிரமுகருமான ரோஜா குவைத்தில் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் மிக வேகமான வதந்தி ஒன்று பரவி வருகிறது. இதுகுறித்த விசாரித்தபோது கிடைத்த தகவல்களை தற்போது பார்ப்போம்



 
 
தசரா கொண்டாட்டத்தை கொண்டாடுவதற்காக நடிகை ரோஜா தனது குடும்பத்துடன் குவைத் சென்றிருந்தார். அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் பிரமுகர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டம் ஒன்றில் ரோஜா கலந்து கொண்டார்
 
இந்த கூட்டத்தில் ரோஜா பேசியபோது அங்கிருந்த தொண்டர்கள் ஆர்வமிகுதியால் நம்மூர் போல கைதட்டி விசிலடித்தனர். இதனால் தொந்தரவுக்கு ஆளான அந்த ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் போலீசிடம் புகார் கொடுக்க விரைந்து வந்த போலீசார் அனுமதியின்றி கூட்டம் நடத்தக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
 
இந்த சம்பவத்தை ஒருசில தெலுங்கு ஊடகங்கள் திரித்து ரோஜா, குவைத் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த செய்தி உண்மையில்லை என்று ரோஜா தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.