புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 19 ஜூன் 2017 (16:05 IST)

உலகின் அமைதியான நாடுகள் இவை தான்!!

2017ம் ஆண்டில் அமைதியான நாடுகள் குறித்த ஆய்வினை ஆஸ்திரேலியாவில் செயல்படும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் நடத்தியது.


 
 
மொத்தம் 163 நாடுகள் இடம் பெற்ற பட்டியலில், அமைதியான நாடுகளில் முதல் இடத்தை ஐஸ்லாந்தும், இரண்டாமிடத்தை டென்மார்க்கும் மூன்றாவது இடத்தை ஆஸ்திரியாவும் பிடித்துள்ளன.
 
இந்த பட்டியலில் ஐஎஸ் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மோசமான இடத்தை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தெற்கு சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகள் உள்ளன.
 
இந்தியாவுக்கு 137 வது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் 152 வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 162 வது இடத்திலும் பூடான் 13 வது இடத்திலும், இலங்கை 80 வது இடத்திலும், வங்கதேசம் 84 வது இடத்திலும் உள்ளது.