உலகிலேயே விலை உயர்ந்த பர்கர்!!; அப்படி என்ன இருக்கு உள்ள?
நெதர்லாந்தை சேர்ந்த சமையல் நிபுணர் ஒருவர் தயாரித்துள்ள பர்கர் உலகின் விலை உயர்ந்த பர்கராக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் பீட்சா உள்ளிட்ட பல்வேறு துரித வகை உணவுகளில் முக்கியமான இடம் பெற்றுள்ளது பர்கர். இரண்டு பன்களுக்கு நடுவே சில பல உணவு பொருட்களை அடைத்து உண்ணும் இந்த உணவு உலகம் முழுவதும் பல்வேறு வகைகளில் கிடைக்கிறது.
இந்நிலையில் நெதர்லாந்தை சேர்ந்த சமையல் நிபுணர் ராபர்ட் ஜான் டெ வின் என்பவர் தயாரித்துள்ள பர்கர் உலகின் விலை உயர்ந்த பர்கராக கூறப்படுகிறது. டெ டால்டன்ஸ் உணவகத்தில் இவர் தயாரிக்கும் இந்த பர்கரின் பெயர் தி கோல்டன் பாய்.
5 ஆயிரம் ஈரோ (இந்திய மதிப்பில் 4.5 லட்சம்) மதிப்புள்ள இந்த பர்கரில் வழக்கமான பொருட்களுடன், உலகின் விலை உயர்ந்த காஃபி கொட்டையான கோபி லுவாக்கால் செய்யப்பட்ட பார்பெக்கு சாஸ், டாம் பெரிகோன் சாம்பெயினில் தயாரிக்கப்பட்ட பன் போன்றவை பயன்படுத்தப்படுவதோடு தங்க இழை சுருளால் சுற்றப்பட்டு அளிக்கப்படுகிறதாம்.