1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 7 ஜூன் 2019 (18:55 IST)

இளம் வயதிலேயே உலகை சுற்றிய அதிசய பெண்!

பயணங்கள் நிறைய அனுபவங்களை தந்தாலும், அது அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே அவை ஒரு வரமாக அமைகிறது. அந்த வகையில் “பயணங்களின் காதலிதான் இந்த லெக்ஸி அல்ஃபோர்ட்”. 21 வய்து நிரம்பி இவர் உலகின் அத்தனை  நாடுகளையும் சுற்றி வந்த இளம் வயதுப் பெண் என்கிற பெருமையையும் சாதனையையும் படைத்திருக்கிறார்.
லெக்ஸி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். லெக்ஸி சிறு வயதில் பள்ளி  விடுமுறையின்போது பெற்றோருடன் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். அந்த சின்ன வயதிலேயே 196 நாடுகளுக்கும் சென்று  சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது அவருடைய கனவாக இருந்திருக்கிறது.
 
லெக்ஸி, கம்போடியா முதல் எகிப்து வரை பல நாடுகளுக்குப் பயணித்துவிட்டார். 196-வது நாடாக அவர், கடந்த மே மாதம் 31-ம் தேதி  வடகொரியா வந்தபோதுதான் அவருக்கு ‘இளம் வயதிலேயே அனைத்து நாடுகளையும் சுற்றி வந்தவர்’ என்கிற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.  இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் லெக்ஸி.
பயணங்கள் குறித்த அனுபவங்களை ஒரு நிறுவனத்துக்கு அளித்த போட்டியில், உலகத்தை அறிமுகப்படுத்தியதில் என் பெற்றோர்கள் மிக  முக்கிய பங்கு உண்டு. பயணங்களுக்காக நான் அதிக பணத்தை செலவு செய்ய மாட்டேன். ஆடம்பரமான இடங்களை தேடாமல், இருக்கிற  இடத்தைச் சரியாக பயன்படுத்தி கொள்வேன். பெரும்பாலும் பயணம் செல்லும் நாடுகளுக்கு முன்னரே பிளான் செய்து செல்வதில்லை. ஆனால்  ஆஃபர் இருக்கும் நேரம் பார்த்து பிளைட் டிக்கட் பதிவு செய்துகொள்வேன். மேலும் போகிற இடங்களில் உள்ள புதுப்புது அனுபவங்களைத்  தெரிந்துகொள்வேன்.
 
எனது பெற்றோர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ய மாட்டேன். அதே நேரம் தேவையில்லாத பொருள்களை வாங்காமல், சேமித்து பயணத்துக்காக மட்டுமே செலவி செய்வேன். ஐ லவ் டிராவல் என்று லெக்ஸி கூறியுள்ளார்.