மர்மமான முறையில் பெண்களின் கற்பை சூறையாடிய டாக்ஸி டிரைவர்!
பிரான்ஸில் டாக்ஸி டிரைவர் ஒருவர் தனது வண்டியில் ஏறும் பெண்களுக்கு சாக்லெட் கொடுத்து அவர்களுக்கே தெரியாமல் அவர்களை கற்பழித்து வந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
52 வயது மதிக்கதக்க நபர்ட் ஒருவர் ஒரு செயலியின் மூலம் தனது வாகனத்தை இயக்கி வந்தார். தனது வாகனத்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு சாக்லெட் வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஆனால், அந்த சாக்லெட்டின் பின்னணியில்தான் ஆபத்து இருந்துள்ளது. ஆம், அது போதை மருந்து கலக்கப்பட்ட சாக்லெட். பெண்கள் இதை உட்கொண்டதும் மயங்கி உள்ளனர். பின்னர் அவர்களுக்கே தெரியாமல் அவர்களை கற்பழித்துள்ளார்.
பெண் ஒருவர் இது குறித்து ஏற்பட்ட சந்தேகத்தின் பெயரில் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற போது இந்த உண்மை வெளிவந்துள்ளது. இதன் பின்னர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குற்றம் நிறுபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் அந்த நபருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என தெரிகிறது.