இறந்த குழந்தைகளை மடியில் வைத்து அழுத பெண் ! அமெரிக்காவில் அதிர்ச்சி
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள ராக் லேண்ட் நகரில் வசித்து வந்தவர் ஜூவான் ரோட்ரிக்ஸ், இவரது மனைவி மரிசா. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒருமகன் , லூனா மற்றும் போனெக்ஸ் ஆகிய ஒருவயதான இரட்டைக் குழந்தைகள் இருந்தனர்.
வேலைக்குச் செல்லும் தம்பதியரான இவர்கள் தினமும் காலையில், தங்கள் குழந்தைகளை பாதுகாப்பு மையத்தில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்வது வழக்கம்.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காரில் குழந்தைகளை ஏற்றிக்கொண்ட ஜூவான், மூத்த மகனை ஒரு மையத்தில் இறக்கிவிட்டு தன் வேலை செய்யும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
தன் காரில் பின் சீட்டில் இருந்த இரு குழந்தைகளை பாதுகாப்பு மையத்தில் இறக்கிவிட மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. பின்னர் பணி முடிந்து எப்போதும் போல வீட்டுக்கு காரை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது பின் இருக்கையைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வாயில் நுரைதள்ளியபடி இருகுழந்தைகளும் இருந்துள்ளனர். உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் வந்து பரிசோதித்துவிட்டு ,நீண்ட நேரமாக குழந்தைகள் காரில் இருந்ததால் வெப்பம் தாங்காமல் இறந்ததை உறுதிசெய்தனர்.
இதுகுறித்து அவர் மனைவி மரிசா ; என் கணவர் எந்த துன்புறுத்தும் காரியத்தை யாருக்கும் செய்யமாட்டார். அதனால் தெரிந்தே இக்காரியத்தை செய்திருக்க மாட்டார். என்னால் குழந்தைகள் இறந்ததை நம்ப முடியவில்லை. என்று தெரிவித்தார். தற்போது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜூவான் ,மீதான வழக்கு விசாரிக்கப்பட்ட பின், அவருக்கு 1 லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதகாகவும் தகவல்கள் வெளியாகிறது.