திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By - திருமலை சோமு
Last Updated : சனி, 27 மார்ச் 2021 (23:13 IST)

உய்கூர் விவகாரமும் பொய் பிரச்சாரமும்!

உய்கூர் இன மக்களை சீனா துன்புறுத்துவதாக குற்றம் சாட்டுவதிலும் போலி செய்திகள் மற்றும் புனையப்பட்ட கதைகளால் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசத்தில் வசிப்பவர்களின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் நோக்கிலும் சில மேலைநாட்டு ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா பற்றி பொய் தகவல்களைப் பரப்பி வரும் பிரிட்டனைச் சேர்ந்த 9 பேர் மற்றும் 4 நிறுவனங்கள் மீது சீன வெளியுறவு அமைச்சகம் 26ஆம் நாள் தடை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
 
சின்ஜியாங்கில் லட்சக்கணக்கான சிறுபான்மை தேசிய இனத்தவர்கள் பருத்தி வயலில் வேலை செய்யக் கட்டாயப் படுத்தப்பட்டனர் என்ற பொய் தகவலை ஜெர்மனி வம்சாவழி அட்ரியன் ஜென்ஸ் பரப்பினார். இதற்கு பிறகு, பருத்தி வளர்ச்சிச் சங்கம் மற்றும் சில புகழ் பெற்ற சர்வதேச நிறுவனங்கள் சின்ஜியாங்கின் பருத்தியைப் பயன்படுத்தாது என தெரிவித்துள்ளன. 
 
கட்டயா உழைப்பு சின்ஜியாங்கில் முற்றிலும் நிலவ இல்லை. மேலும், புள்ளிவிவரங்களின்படி, சின்சியாங்கின் பருத்தி 69.83விழுக்காடாக இயந்திரம் மூலம் எடுக்கப்படுகிறது. சின்ஜியாங் நிதானத்தைச் சீர்குலைத்து வதந்தி பரப்புவதன் மூலம் சீனாவின் வளர்ச்சியை தடுக்க முயலும் மேலை நாடுகளின் சதி பலிக்காது என்பதை பதில் நடவடிக்கைகளின் மூலம் சீனா உணர்த்தி வருகிறது. 
மேலும் இதுபற்றி சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங்கிடம் கேட்ட போது, கடந்த 40 ஆண்டுகளில், சின்ஜியாங்கில் உள்ள உய்கூர் இன மக்கள் தொகை 5.5 மில்லியனிலிருந்து 12.8 மில்லியனாக அதிகரித்துள்ளது, சராசரி ஆயுட்காலம் 30 முதல் 72 வயது வரை அதிகரித்துள்ளது உய்கூர் உட்பட சின்ஜியாங்கில் உள்ள அனைத்து இனத்தவர்களும் சட்டபூர்வமான ஒவ்வொரு உரிமையையும் அனுபவிக்கிறார்கள். பல்வேறு இனங்களைச் சேர்ந்த சின்ஜியாங் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறார்கள் என்று கூறினார். 
 
சின்ஜியாங்கில் வறுமை நிலையில் இருந்த 3.09 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.  அதே நேரத்தில் 2014 முதல் 2019 வரை, பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 919.59 பில்லியன் யுவான் (140.6 பில்லியன் டாலர்) இலிருந்து 1.36 டிரில்லியன் யுவான் (207.9 பில்லியன் டாலர்) ஆக அதிகரித்துள்ளது, சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதம் ஆக உள்ளது. பிபிசி நியூஸ்நைட் வெளியிட்ட செய்தி அறிக்கையில் உய்கூர் பெண் ஜமிரா தாவூத் ஒரு தொழிற்கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் "கருத்தடை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தது. ஜமிரா தாவூத் எந்தவொரு தொழிற்கல்வி மற்றும் பயிற்சி மையத்திலும் படித்ததில்லை என்பதை அவரது சொந்த மூத்த சகோதரர் அப்துஹில் தாவூத் உறுதிப்படுத்தியுள்ளார். கட்டாய கருத்தடை, இனப்படுகொலை, போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு உய்கூர் மக்கள்தொகை அதிகரிப்பே உண்மையை வெளிக்காட்டும் சான்றாகும். ஏற்கனவே ஹாங்காங் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக செயல்படும் பிரிட்டன் தற்போது சின்ஜியாங் விவகாரத்திலும் தலையிட்டு தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை சீன ஒரு போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சீனாவுக்கு எதிராக அரசியல் உள்நோக்குடன் செயல்படும் எந்த ஒரு அந்நிய சக்திக்கும் தக்க பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம் என்பதையே உலக நாடுகளுக்கு சீனா உணர்த்தி வருகிறது.